1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 4 நவம்பர் 2022 (22:29 IST)

மீண்டும் வலிமையாகப் போராடுவேன்- முன்னாள் பிரதமர் இம்ரான் கான்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த  நிலையில்,  மீண்டும் வலிமையாகப் போராடுவேன் என்று தெரிவித்துள்ளர்.

மோசடி செய்ததாக் குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் அவரது அரசு கலைக்கப்பட்டது.

தற்போது எதிர்க்கட்சியாக உள்ள இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீப் இன்சாப் கட்சி பல்வேறு போராட்டங்களை அறிவித்து தொடர்ந்து பேரணி நடந்தி வருகிறது.

இதில்.  ஆளும் பிரதமர்  ஷபாஷ் ஷெரீப் தலைமையிலான ஆட்சியையும் அரசையும் எதிர்த்து கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

இந்த நிலையில், நேற்று,  பாகிஸ்தானின், பஞ்சாப் மாகாணத்தில் உள்ள வசிராபாத்தில்,  இம்ரானின் கட்சி சார்பில்,ஆளும் அரசை எதிர்த்து நீண்ட பேரணி நடந்தது. இந்த பேரணியில் இம்ரான்கான் கலந்து கொண்ட நிலையில் திடீரென மர்ம நபர்  துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

இதில், இம்ரான்கான் வலது காலில் குண்டு  பாய்ந்தது, இதைஅடுத்து  உடனடியாக இம்ரான்கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இம்ரான்கானுடன் கட்சி நிர்வாகிகள் 10 பேர் காயமடைந்ததாகவும் இதில், ஒருவர் பலியானதாகவும், 9 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும்  தகவல்கள் வெளியாகியுள்ளது.  
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரதமர் ஷபாஸ் ஷெரீப், முன்னாள் பிரதமர் ஷெரீப், உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் விசாரித்ததில், இம்ரானை துப்பாக்கியால் சுட்ட  நவீத்திடம் இருந்து 9. எம்.எம் ரக துப்பாக்கியைக் கைப்பற்றியுள்ளனர். இந்த நிலையில்

துப்பாக்கிச்சூட்டில்  காயமடைந்தாலும் அரசுக்கு எதிராக தொடர்ந்து வலிமையுடன் போராடுவேன் என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj