வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 3 நவம்பர் 2022 (17:32 IST)

இம்ரான் கான் மீது துப்பாக்கிச்சூடு: காலில் குண்டு பாய்ந்ததாக தகவல்!

Imrankhan
முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும் இம்ரான்கானின் காலில் குண்டு பாய்ந்த தாகவும் அவர் நூலிழையில் உயிர் தப்பியதாக கூறப்படுகிறது. 
 
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் அரசை எதிர்த்து கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அவர் தேர்தலில் போட்டியிடவும் தடை செய்யப்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் பாகிஸ்தானில் ஆளும் அரசை எதிர்த்து நீண்ட பேரணி நடந்தது. இந்த பேரணியில் இம்ரான்கான் கலந்து கொண்ட நிலையில் திடீரென மர்ம நபர்களால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது 
 
இதில் இம்ரான்கான் கட்சி நிர்வாகிகள் சிலர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இம்ரான்கான் வலது காலில் குண்டு பாய்ந்ததாகவும், இதனை அடுத்து இம்ரான்கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது
 
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva