செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 25 மார்ச் 2018 (14:39 IST)

கேப்டன் பதவியில் இருந்து ஸ்மித் நீக்கம்; ஆஸ்திரேலிய அரசு அதிரடி

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், அவரது அணியின் தொடக்க வீரர் பந்தை சேதப்படுத்தியதை ஒப்புக்கொண்டதால் கேப்டன் பதவியில் இருந்து ஸ்மித்தை நீக்க ஆஸ்திரேலிய அரசு    கிரிக்கெட் வாரியத்துக்கு உத்தரவிட்டது.
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது.
 
டெஸ்ட் தொடரில் வீரர்கள் அறையில் ஏற்பட்ட மோதல், களத்தில் வாக்குவாதம், ரசிகர்களிடம் ஆஸ்திரேலிய வீரர்கள் மோதல் என பல்வேறு பிரச்சினைகளில் ஆஸ்திரேலிய அணி சிக்கியது.
 
இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய  அணியின் தொடக்க வீரர் பான்கிராப்ட் பீல்டிங் செய்த போது பந்தை பொருள் ஒன்றால் சேதப்படுத்தி உள்ளார். ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவன் சுமித்தும் இந்த விவகாரத்தை ஒப்புக் கொண்டார்
 
இதனையடுத்து சுமித்தை கேப்டன் பதவியில் இருந்து நீக்க அந்நாட்டு அரசு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு உத்தரவிட்டது.