செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 23 ஜனவரி 2018 (18:55 IST)

கோலி நீண்ட நாள் கேப்டனாக நீடிக்க மாட்டார்; ஸ்மித் கருத்து

தென் ஆப்பரிக்காவின் முன்னாள் கேப்டன் ஸ்மித், கோலியின் அணுகுமுறையால் அவர் நீண்ட நாள் கேப்டனாக நீடிப்பாரா என்பது எனக்கு உறுதியாக தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

 
இந்திய அணி தென் ஆப்பரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய தோல்வி அடைந்தது. இதன்மூலம் தென் ஆப்பரிக்க அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.
 
2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் வீரர்களை மாற்றியமைத்தது பல விமர்சனங்களை எழுப்பியது. முன்னணி வீரர்கள் பலரும் கோலியின் முடிவை விமர்சித்தனர். இந்நிலையில் தென் ஆப்பரிக்க தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த தென் ஆப்பரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் கூறியதாவது:-
 
நான் விராட் கோலியை பார்த்தவரை அவரை, ஆக்கப்பூர்வமாக வழிநடத்தும் தேவைப்பட்டல் அவரது முடிவுகளை கேள்விகேட்கும் மாற்றும் பயிற்சியாளர் ஒருவர் தேவை. உலக கிரிக்கெட்டில் அவர் எவ்வளவு சக்தி வாய்ந்த வீரர் என்பதை நாம் அறிவோம். 
 
அவரை நான் பார்த்தவரையில் நீண்ட காலம் இந்திய அணியின் கேப்டனாக அவர் நீடிப்பாரா என்பது எனக்கு உறுதியாக தெரியவில்லை என்று கூறியுள்ளார்.