ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 16 அக்டோபர் 2023 (10:59 IST)

புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்துக்கே சென்ற ஆஸ்திரேலியா… இது என்னப்பா சோகம்?

உலகக் கோப்பை தொடர் தொடங்கி கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலிய அணி இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவிடம் தோற்று புள்ளிப்பட்டியலில் 9 ஆவது இடத்தில் இருந்தது.

நேற்று ஆப்கானிஸ்தான் அணி இங்கிலாந்தை வென்றதை அடுத்து 2 புள்ளிகள் பெற்று மேலே சென்றதால் இப்போது ஆஸ்திரேலிய அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. நெதர்லாந்து அணியும் இன்னும் வெற்றிகள் பெறாமல் 0 புள்ளிகள் பெற்றுள்ள நிலையில் அந்த அணியின் ரன்ரேட் ஆஸியை விட அதிகமாக உள்ளதால் 9 ஆவது இடத்தில் உள்ளது.

இதற்கிடையில் ஆஸ்திரேலிய அணி இன்று இலங்கையை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் முதல் வெற்றியைப் பெரும் பட்சத்தில் புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் காணும் வாய்ப்புள்ளது.