திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 12 பிப்ரவரி 2018 (23:30 IST)

கிரிப்டோஜேக்கிங் தாக்குதல்: ஆஸ்திரேலியாவில் இணையதளங்கள் முடக்கம்

உலகம் முழுவதும் கம்ப்யூட்டர்கள் பயன்படுத்துபவர்களுக்கு பெரும் தலைவலியாக உள்ள கிரிப்டோஜேக்கிங் தாக்குதல் ஆஸ்திரேலிய அரசின் இணையதளங்களையும் பதம் பார்த்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரவுசர்களின் மூலம் ஊடுருவும் இந்த மால்வேர் கம்ப்யூட்டரை பயன்படுத்துபவர்களுக்கே  தெரியாமல் அவர்களின் கம்ப்யூட்டர்கள் உள்ளிட்ட சாதனங்களில் ஊடுருவி, கிரிப்டோ கரன்சி என்னும் டிஜிட்டல் கரன்சியில் இருந்து குறிப்பிட்ட அளவு பணத்தை எடுக்கும் இந்த தாக்குதலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதிதாக இன்ஸ்டால் செய்யும் பிரவுசர்களிலும் ஊடுருவத்தக்க இந்த மால்வேர். இதுவரை தனியார் கம்ப்யூட்டர்களில் மட்டுமே ஊடுருவி வந்த நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவின் விக்டோரிய நாடாளுமன்றம், சட்ட ரீதியான நிர்வாகத் தீர்ப்பாயம், நீர் விநியோகம் ஆகியவை உள்பட பல இணையதளங்களில் இந்த வகையான மால்வேர் ஊடுருவியுள்ளது. இந்த தாக்குதலை அடுத்து ஆஸ்திரேலிய அரசு இணையதளங்களில் கூடுதல் பாதுகாப்பு தேவை என அந்நாட்டு தொழில்நுட்ப வல்லுனர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.