1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Bumrah surpassed kapil dev 33 year record

மீண்டும் ஒரு கபில்தேவ் சாதனையை முறியடித்த பும்ரா!

பும்ரா
கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணியின் பவுலிங் யூனிட்டின் முதுகெலும்பாக பும்ரா இருந்து வருகிறார். அந்தளவுக்கு சிறப்பாக விளையாடி வரும் பும்ரா பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியை வெகு சிறப்பாக வழிநடத்தி வெற்றியும் பெறவைத்தார்.

இந்நிலையில் தற்போது நடந்து வரும் மெல்போர்ன் டெஸ்ட்டில் அவர் 8 விக்கெட்களை வீழ்த்தி இந்திய அணியின் பவுலிங் யூனிட்டை வழிநடத்தி வருகிறார்.

இந்நிலையில் தற்போது அவர் கபில்தேவ்வின் 33 ஆண்டுகால சாதனை ஒன்றைத் தகர்த்துள்ளர். 1991 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் கபில்தேவ் 25 விக்கெட்கள் வீழ்த்தியிருந்தார். அதுவே இந்திய பவுலர் ஒருவர் ஆஸ்திரேலியா தொடரில் வீழ்த்திய அதிக விக்கெட்களாகும். ஆனால் இப்போது அந்த சாதனையை பும்ரா முறியடித்துள்ளார்.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
சதமடித்து அசத்திய நிதீஷ்குமாருக்கு ஆந்திரா கிரிக்கெட் வாரியம் பரிசு அறிவிப்பு!