1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Aussie is not looking for warner for champions trophy

சாம்பியன்ஸ் கோப்பைக்கு வார்னரை அணியில் எடுக்க பரிசீலனை இல்லை… ஆஸி தேர்வுக்குழு வாரியம் தகவல்!

டேவிட் வார்னர்
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியைச் சேர்ந்த  டேவிட் வார்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஏற்கனவே அறிவித்த நிலையில், நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரோடு சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து முற்றிலும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

நடந்து முடிந்த டி 20 உலகக் கோப்பையில் ஆஸி அணியால் சூப்பர் 8 சுற்றை தாண்ட முடியவில்லை. வார்னரின் பேட்டிங் சிறப்பாக அமையவில்லை. இந்நிலையில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடக்க உள்ள சாம்பியன்ஸ் கோப்பைத் தொடரில் விளையாட தான் தயாராக இருப்பதாக அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் அணித் தேர்வுக்குழு உறுப்பினரான ஜார்ஜ் பெய்லி இதுபற்றி பேசும்போது “சாம்பியன்ஸ் கோப்பைத் தொடருக்கான அணியில் நாங்கள் வார்னரை அணியில் எடுக்கும் திட்டத்தில் இல்லை” எனக் கூறியுள்ளார்.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
எங்க ஊருக்கு வந்து fun பண்ணுங்க… இந்திய அணிக்கு அழைப்பு விடுத்த மாலத்தீவு!