ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 13 ஜூலை 2024 (16:24 IST)

மும்பையில் கனமழை தொடரும்.. ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

மும்பையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் முக்கிய இடங்களில் வெள்ளக்காடாக இருக்கும் நிலையில் மும்பையில் கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பருவமழை காரணமாகவும் காற்றழுத்த சுழற்சி உருவாக்கி இருப்பதன் காரணமாகவும் மும்பையில் கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மும்பையில் முக்கிய பகுதிகளில் கனமழை மீண்டும் பெய்யும் என ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே மக்கள் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று காலை மும்பையில் மிதமான மழை பெய்ததாகவும் நகரின் பல இடங்களில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

மும்பைக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Edited by Mahendran