திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By sinoj
Last Modified: புதன், 30 ஜூன் 2021 (23:01 IST)

அஸ்வின், தவான், மிதாலிராஜ் பெயர்கள் விருதுக்கு பரிந்துரை !

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் பெண் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் ஆகியோரின் பெயர்கள் கேல் ரத்னா விருதிற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டில் சிறந்து விளங்குபவர்களுக்கு அர்ஜூனா, ராஜீவ்காந்த் கேல் ரத்னா, துரோணாச்சார்யா உள்ளிட்ட விருதுகள் வழங்கி வீரர்களை கவுரவித்து வருகிறது மத்திய அரசு.

இந்நிலையில் கடந்த 2017 முதல் 2020  ஆம் ஆண்டு காலம் வரை இவ்விருதுக்குத் தகுதியானவர்களைப் பரிந்துரைக்கலாம் என மத்திய விளையாட்டுத்துறை சமீபத்தில் தெரிவித்தது.

இந்நிலையில், ராஜீவ் கேல் ரத்னா விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணி வீரர் அஸ்வின் மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலிராஜ் பெயரும் இதே விருதுக்குப் பரிந்துரைத்துள்ளது பிசிசிஐ.

மேலும், அர்ஜூனா விருதிற்கு ஷிகர் தவான், கே.எஸ்.ராகுல், பும்ரா ஆகியோர் பெயரை பரிந்துரைத்துள்ளது. இவர்களுக்கு விளையாட்டுத்துறை வீரர்கள் மற்றும் ரசிகர்களும் வாழ்த்துகளும், பாராட்டுகள் தெரிவித்து வருகிறது.