திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 19 ஏப்ரல் 2021 (06:54 IST)

ஷிகர் தவான் அதிரடியால் டெல்லி அணி வெற்றி!

ஷிகர் தவான் அதிரடியால் டெல்லி அணி வெற்றி!
நேற்று நடைபெற்ற இரண்டாவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஷிகர் தவான் அதிரடி ஆட்டத்தால் டெல்லி அணி வெற்றிபெற்றுள்ளது
 
நேற்று பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் டெல்லி அணி டாஸ் வென்றது. இதனையடுத்து அந்த அணி பந்து வீச முடிவு செய்ததை அடுத்து பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது
 
அந்த அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான கே.எல்.ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் மிக அபாரமாக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் 196 ரன்கள் என்ற இலக்கை நோக்கி டெல்லி அணி விளையாடி நிலையில் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் அதிரடி ஆட்டத்தால் 18.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 196 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஷிகர் தவான் 92 ரன்கள் அடித்தார் என்பதும் இதில் 13 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஷிகர் தவான் ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
 
இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணிக்கு மேலும் இரண்டு புள்ளிகள் கிடைத்தது. அந்த அணி மொத்தம் 4 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளன என்பதும் பெங்களூர் அணி 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.