1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Ashwin talked abut kohli perfomance in Pakistan match

ஒரு கட்டத்துல கோலி சந்திரமுகியா மாறிட்டாரு… அஸ்வின் சொன்ன தகவல்!

விராட் கோலி
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, தான் ஒரு மாஸ்டர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துவிட்டார்.  31 ரன்களுக்கு 4 ரன்களை இழந்து தடுமாறிய இந்திய அணியை கட்டிக்காத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் வெற்றியை வசப்படுத்தினார் கோலி.

அவர் 53 பந்துகளில் 82 ரன்கள் சேர்த்த இன்னிங்ஸில் 6 பவுண்டரிகளு 4 சிக்ஸர்களும் அடக்கம். அவரின் வாழ்நாள் சிறந்த இன்னிங்ஸை விளையாடியுள்ள கோலியை கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் முன்னாள்  வீரர்கள் என அனைவரும் அவரைப் பாராட்டி தீபாவளிக்கு முந்தைய நாளே இந்தியாவில் தீபாவளி தொடங்கி பலரும் வெற்றியைக் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

இந்நிலையில் கடைசி ஓவரை அவரோடு விளையாடிய அஸ்வின் கோலி பற்றி தன்னுடைய யுட்யூப் சேனலில் “கோலி 45 பந்துக்கப்புறம் கங்காவ இருந்த அவர் சந்திரமுகியா மாறிட்டாரு. அவருக்கு ஏதோ பூந்த மாதிரி. அவர் ஆடின ஷாட் எல்லாம்… நான் களத்துக்குள்ள போகும்போது சந்திரமுகி மாறி கண்ன வச்சிகிட்டு அங்க அடி, இங்க அடின்னு சொல்லிட்டு இருந்தாரு” எனக் கூறியுள்ளார்.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
மெல்போர்ன் மைதானத்தில் மழை: நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் போட்டி தொடங்குமா?