தொடர்புடைய செய்திகள்
- இஷான் கிஷான் டிராவிட் மனதில் நிச்சயம் இருப்பார்… சவுரவ் கங்குலி கருத்து!
- ஸ்ரேயாஸ் ஐயர் இல்லன்னா என்ன… இவர நான்காவது இடத்துல இறக்குங்க… கங்குலியின் ஐடியா!
- மீண்டும் களத்தில்… பேட் செய்த ரிஷப் பண்ட்… வைரலாகும் வீடியோ!
- யுவ்ராஜ் சிங்குக்குப் பிறகு யாருமே இல்லை… கேப்டன் ரோஹித் ஷர்மா வேதனை!
- உலகக் கோப்பையில் கண்டிப்பாக நான் இருப்பேன்… தினேஷ் கார்த்திக் சொல்வது என்ன?
யுவ்ராஜ், தோனிக்குப் பிறகு அந்த இடத்தை நிரப்பியவர் கே எல் ராகுல்தான்… மூத்த வீரர் கருத்து!
இந்திய அணி இந்த ஆண்டு நடக்கவுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடரை மனதில் வைத்து தயாராகி வருகிறது. இதற்காக பல இளம் பேட்ஸ்மேன்கள் அணியில் மாற்றி மாற்றி பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்திய அணியில் நடுவரிசை மற்றும் பின்வரிசை பேட்டிங் மிகவும் பலவீனமாக இருப்பது ஒரு முக்கியக் குறையாக உள்ளது. குறிப்பாக நான்காவது இடத்தில் யாரை விளையாட வைப்ப்து என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுபற்றி பேசியுள்ள இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா “இந்திய அணியில் யுவ்ராஜ் சிங்குக்கு பிறகு நான்காம் இடத்தில் எந்த வீரரும் சிறப்பாக விளையாடவில்லை.” என சமீபத்தில் கூறியிருந்தார்.
இந்நிலையில் இப்போது அணியின் மூத்த வீரரான அஸ்வின் இதுகுறித்து பேசும்போது “இந்திய அணியில் யுவ்ராஜ் சிங் மற்றும் தோனி ஆகியோருக்கு அடுத்து ஐந்தாவது இடத்தை சரியாக நிரப்பியவர் கே எல் ராகுல்தான். மேலும் அவர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்பது முக்கியத்துவம் பெறுகிறது” எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்