யுவ்ராஜ் சிங்குக்குப் பிறகு யாருமே இல்லை… கேப்டன் ரோஹித் ஷர்மா வேதனை!
இந்திய அணி இந்த ஆண்டு நடக்கவுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடரை மனதில் வைத்து தயாராகி வருகிறது. இதற்காக பல இளம் பேட்ஸ்மேன்கள் அணியில் மாற்றி மாற்றி பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்திய அணியில் நடுவரிசை மற்றும் பின்வரிசை பேட்டிங் மிகவும் பலவீனமாக இருப்பது ஒரு முக்கியக் குறையாக உள்ளது.
இதுபற்றி பேசியுள்ள இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா “இந்திய அணியில் யுவ்ராஜ் சிங்குக்கு பிறகு நான்காம் இடத்தில் எந்த வீரரும் சிறப்பாக விளையாடவில்லை. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஸ்ரேயாஸ் ஐயர் அந்த இடத்தில் நன்றாக விளையாடினார். ஆனால் அவருக்கு இப்போது காயம் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு பதில் வேறொரு வீரரை தேட வேண்டிய நிலை உள்ளது எனக் கூறியுள்ளார்.
இந்திய அணியில் ரிஷப் பண்ட், கே எல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் என மூன்று வீரர்கள் அந்த இடத்துக்கு தகுதியாக இருந்தாலும் இப்போது அவர்கள் அனைவரும் காயத்தால் அணியில் இருந்து விலகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.