ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 25 ஆகஸ்ட் 2023 (20:40 IST)

இந்தியா வரும் கால்பந்து நட்சத்திர வீரர் நெய்மர்

Neymar
ஆசிய கால்பந்து விளையாட்டு போட்டியில் விளையாட நெய்மர்  இந்தியாவுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர்    நெய்மர் . பிரேசில் நாட்டைச்  சேர்ந்த இவர் பிரேசில் தேசிய அணிக்காக சர்வதேச கால்பந்து போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.

அதேசமயம்,  பாரிஸ் செயின்ட் ஜெர்மன் என்ற ஜெர்மன் கிளப் அணிக்காக விளையாடி வந்தார்.

இந்த நிலையில், சமீபத்தில்,  நெய்மரும்  பல ஆண்டுகளாக விளையாடி வந்த பி.எஸ்.ஜி கால்பந்து  கிளப்பைவிட்டு விலகி சவுதி அரேபியாவின் அல் ஹிலால் கிளப்பில் இணைந்துள்ளார்.

2 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் அவர் இந்த கிளப்பில் இணைந்துள்ளதாகவும், இவருக்கு ரூ.908 கோடி ஊதியம் கொடுக்க அல் ஹிலால் கிளப் நிர்வாகம் முன்வந்துள்ளதாகவும் தகவல் வெளியான நிலையில்,  நெய்மர் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தார்.

இந்த நிலையில் ஆசிய கால்பந்து விளையாட்டு போட்டி D பிரிவில் சவூதியின் அல் ஹிலால் அணியும், இந்தியாவின் மும்பை சிட்டி அணியும் மோதவுள்ளது. எனவே, அல் ஹிலால் அணிக்காக பிரேசில் வீரர் நெய்மர் விளையாட உள்ளார். இரு அணிகளுக்கு இடையிலான போட்டி  இந்தியாவில்  நடைபெறவுள்ளதால், இதைக் காண ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர். எனவே நெய்மர் இப்போட்டியில் விளையாட இந்தியாவுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகிறது.