வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 17 ஆகஸ்ட் 2023 (07:19 IST)

மீண்டும் களத்தில்… பேட் செய்த ரிஷப் பண்ட்… வைரலாகும் வீடியோ!

இந்த ஆண்டு தொடக்கத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் உத்தரகாண்ட் அருகே ரூர்க்கி பகுதியில் சாலையில் முன்னர் காரில் சென்றுக் கொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு கட்டையில் மோதி கார் தீப்பிடித்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பண்ட் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தசைநார் கிழிவுக்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் தன்னுடைய உடல்நிலை முன்னேற்றத்தைப் பற்றி அவ்வப்போது வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் சில வாரங்களுக்கு முன்னர் அவர் கடினமான வொர்க் அவுட் செய்யும் வீடியோவை இணையத்தில் வெளியாகி, அது கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இதையடுத்து இப்போது அவர் மைதானத்தில் பேட்டிங் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.