1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Ashwin talked about his retirement few years back

கும்ப்ளே சாதனையை முறியடிக்க மாட்டேன்… அதை நெருங்கியதும் ஓய்வு பெற்றுவிடுவேன் –அஸ்வின் பகிர்ந்த தகவல்!

அஸ்வின்
தற்போது டெஸ்ட் விளையாடி வரும் பவுலர்களில் தனிச்சிறப்பு வாய்ந்தவர் அஸ்வின். 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 516 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். இந்தியா சார்பாக டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அனில் கும்ப்ளேவுக்குப் பிறகு இரண்டாவது இடத்தில் உள்ளார் அஸ்வின்.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் பேசிய அஸ்வின் “நான் கும்ப்ளேவின் தீவிரமான ரசிகன். அதனால் அவரின் சாதனையான 619 விக்கெட்கள் என்பதை நான் முந்த மாட்டேன். நான் டெஸ்ட் போட்டிகளில் 618 விக்கெட் எடுத்ததும் ஓய்வை அறிவித்துவிடுவேன்” என்று அதில் கூறியுள்ளார். அந்த பேட்டி இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஆனால் அஸ்வின் 500 விக்கெட்கள் எடுத்த போது பேசிய அனில் கும்ப்ளே “டெஸ்ட் கிரிக்கெட்டில் நீங்கள் 625 அல்லது 630 விக்கெட்களை வீழ்த்திய பிறகுதான் ஓய்வு பெறவேண்டும்.  உங்கள் சாதனை அதற்கு குறைவாக இருக்கக் கூடாது” என கோரிக்கை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
நாடு திரும்பினார் வினேஷ் போகத்.! விமான நிலையத்தில் கண்ணீர் மல்க வரவேற்பு.!!