1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: சனி, 17 ஆகஸ்ட் 2024 (09:19 IST)

‘உலகின் சிறந்த வீராங்கனையை வென்றுவிட்டேன்.. பதக்கம் எல்லாம் வெறும் பொருள்தான்’ – பயிற்சியாளரிடம் நம்பிக்கையுடன் பேசிய வினேஷ் போகத்!

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்த இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத எடை கூடுதலாக இருந்த காரணத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து அவருக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட வேண்டும் என சர்வதேச நீதிமன்றத்தில் இந்திய ஒலிம்பிக் சங்கம் சார்பாக வழக்குத் தொடரப்பட்டது. ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதுபற்றிப் பேசிய வினேஷ் போகத்தின் பயிற்சியாளர் வோலர் அகாஸ், ”அன்று இரவு முழுவதும் கடுமையான பயிற்சிகளையும் , நீராவிக் குளியலை மேற்கொண்டும் அவரால் நிர்ணயிக்கப்பட்ட எடைக்கு வர முடியவில்லை” என்று தனது எக்ஸ் தளப் பதிவில் கூறியிருந்தார்.

மேலும் மருத்துவமனை சிகிச்சைக்குப் பின்னர் வந்த வினேஷ் தன்னிடம் பேசும்போது, “நீங்கள் வருத்தப்படாதீர்கள். உலகின் தலைசிறந்த வீராங்கனையை நான் தோற்கடித்துள்ளேன்.இதன் மூலம் உலகின் தலைசிறந்த வீராங்கனைகளில் நானும் ஒருவர் என்பதை நிரூபித்துள்ளேன். எனது இலக்கை அடைந்துவிட்டேன். பதக்கம், மேடை எல்லாம் வெறும் பொருட்கள்தான் என நம்பிக்கையோடு பேசினார்.” எனக் கூறியிருந்தார். ஆனால் அவர் இந்த பதிவை சிறிது நேரத்திலேயே நீக்கிவிட்டார்.