வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: திங்கள், 26 ஆகஸ்ட் 2024 (14:27 IST)

கோலி எடுத்த அந்த முடிவு தவறான ஒன்றாகும்… முன்னாள் பயிற்சியாளர் கருத்து!

ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை கிரிக்கெட்டின் முகமாக ஒரு வீரர் இருப்பார். அந்த வகையில் இப்போது உச்சப் புகழோடு உலகளவில் ரசிகர்களைப் பெற்று இருக்கிறார் கோலி. சமீபத்தில் டி 20 உலகக் கோப்பையை வென்ற அணியில் அவர் இடம்பெற்றிருந்தார். அவர் உலகக் கோப்பையோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர, அந்த புகைப்படம் ஆசியாவிலேயே அதிகம் பேரால் லைக் செய்யப்பட்ட புகைப்படம் என்ற சாதனையைப் படைத்தது.

கடந்த 2021 ஆம் ஆண்டு கோலிக்கு மிகவும் மோசமான ஆண்டாக அமைந்தது. அந்த ஆண்டுதான் அவர் தன்னுடைய டி 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டன்சியை துறந்தார். ஒருநாள் போட்டிக்கான கேப்டன்சியில் இருந்து வலுக்கட்டாயமாக நீக்கப்பட்டார்.

இந்நிலையில் கோலி டெஸ்ட் கேப்டன்சி விலகல் ஒரு தவறான முடிவு என முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் கூறியுள்ளார். அதில் “டெஸ்ட் கேப்டன்சியில் கோலி விலகி இருக்கக் கூடாது. ஏனென்றால் அவர் தலைமையில் இந்திய அணி வெளிநாட்டுத் தொடர்களில் கூட மிகச்சிறப்பாக விளையாடியது. அதுமட்டுமில்லை, கேப்டன்சியில் இருந்தபோது அவரின் பேட்டிங் திறனும் சிறப்பாக இருந்தது.” எனக் கூறியுள்ளார்.