தொடர்புடைய செய்திகள்
- வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட்டில் கோலி நடனம்! வைரல் வீடியோ
- ஹர்பஜன் சிங்கின் சாதனையை முறியடித்த அஸ்வின்!
- வெஸ்ட் இண்டீஸை பந்தாடிய இந்தியா… முதல் டெஸ்ட்டில் அபார வெற்றி!
- டிராவிட்டின் அந்த வார்த்தை என்னை மூளைச்சலவை செய்துவிட்டது… அஸ்வின் கருத்து!
- நேற்றைய போட்டியில் முக்கியமான மைல்கல்லை எட்டிய அஸ்வின்!
அஸ்வின் பேட்ஸ்மேனின் கவனத்தைக் கலைப்பதில் வல்லவர்… பாராட்டிய முன்னாள் வீரர்!
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான அஸ்வின் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 12 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இதையடுத்து அவரைப் பல முன்னாள் விளையாட்டு வீரர்களும் பாராட்ட தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் முன்னாள் பயிற்சியாளருமான அனில் கும்ப்ளே அஸ்வினை மனம்திறந்து பாராட்டியுள்ளார். அதில் “அஸ்வின் பேட்ஸ்மேன்களின் மனதுடன் விளையாடுகிறார். அஸ்வினை எதிர்கொண்ட ஒவ்வொரு பேட்ஸ்மேனிடமும் நீங்கள் அழுத்தத்தை பார்க்கலாம். அதை அவர்களின் உடல் மொழியில் நீங்கள் காணலாம்.
ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் ஏற்றவாறு அஸ்வின் மிகத் தந்திரமாக பந்துவீசினார். எந்தவொரு பேட்ஸ்மேனுக்கும் அவரை எதிர்கொள்வது சவாலானதாகவே இருக்கும்” எனக் கூறியுள்ளார்.