1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 4 ஜூன் 2024 (15:27 IST)

நான் உலகக் கோப்பைக்காக பக்காவா தயாராகி வந்திருக்கிறேன்… சஞ்சு சாம்சன் நம்பிக்கை!

இந்திய கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இடம்பிடிக்க கடந்த சில ஆண்டுகளாக போராடி வருகிறார். ஆனால் அவருக்கு போட்டியாக ரிஷப் பண்ட், இஷான் கிஷான் மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் இருக்கின்றனர். ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தலைமையேற்று வழிநடத்தும் சஞ்சு, இப்போதுதான் சில போட்டிகளில் வாய்ப்புகளைப் பெற்று வருகிறார். ஆனால் தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைப்பதில்லை.

9 ஆண்டுகளில் அவர் இதுவரை 16 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 25 டி 20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். ஐபிஎல் தொடரில் அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குக் கேப்டனாக சிறப்பாக செயல்பட்ட சஞ்சு சாம்சன் டி 20 உலகக் கோப்பைக்கான அணியில் இடம்பெற்றார்.

ஆனால் அவர் ப்ளேயிங் லெவன் அணியில் இடம்பிடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி பேசியுள்ள அவர் ‘நான் இந்த தொடருக்காக மிகச்சிறப்பாக தயாராகி வந்துள்ளேன். அணிக்கு என்ன தேவையோ அதை நான் கொடுப்பேன். அணியில் எந்தந்த வீரர்கள் என்ன காம்பினேஷனில் இருக்கவேண்டும் என்பதை பொறுத்து யாருக்கு இடம் கிடைக்கும் என்பதெல்லாம். இந்திய அணியில் இடம்பிடிப்பது எவ்வளவு கடினம் என்று எனக்குத் தெரியும். கிரிக்கெட்டும் வாழ்க்கையும் எனக்கு நிறைய விஷயங்களைக் கற்றுக் கொடுத்துள்ளது” எனக் கூறியுள்ளார்.