தொடர்புடைய செய்திகள்
- சீனாவில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனையா? சுகாதாரத்துறை அமைச்சகம்
- 67.70 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!
- துருக்கி தொடர் நிலநடுக்கத்தில் சிக்கி 19,300 பேர் பலி...
- ஆட்டோ மீது லாரி மோதி விபத்து-பள்ளிக் குழந்தைகள் 7 பேர் பலி
- நைட் வாட்ச்மேனாக களமிறங்கிய அஸ்வின்: இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்!
கும்ப்ளேவின் 18 ஆண்டுகால சாதனையை முறியடித்த அஸ்வின்!
இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் நேற்று டெஸ்ட் போட்டிகளில் 450 விக்கெட்களைக் கைப்பற்றி சாதனைப் படைத்தார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நாக்பூர் மைதானத்தில் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நிலையில் 177 ரன்கள் சேர்த்து ஆல் அவுட் ஆனது. இந்த இன்னிங்ஸில் அஸ்வின் 2 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 450 விக்கெட்கள் எடுத்து கும்ப்ளேவுக்கு பிறகு அந்த சாதனையை படைத்தார்.
அதுமட்டும் இல்லாமல் குறைந்த போட்டிகளில் 450 விக்கெட் என்ற மைல்கல் என்ற கும்ப்ளேவின் சாதனையையும் முறியடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் உலகளவில் முரளிதரனுக்கு பிறகு இந்த சாதனையைப் படைத்த பவுலர் அஸ்வின் என்பதும் குறிப்பிடத்தக்கது. முரளிதரன் 80 போட்டிகளில் எட்டிய மைல்கல்லை, அஸ்வின் 89 போட்டிகளில் எட்டியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்