துருக்கி தொடர் நிலநடுக்கத்தில் சிக்கி 19,300 பேர் பலி...
சமீபத்தில் துருக்கி மற்றும் ஏற்பட்ட தொடர் நில நடுக்கம் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக துருக்கி நாடே ஐந்து முதல் பத்து மீட்டர் வரை நகர்ந்துள்ளதாக புவியியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நில நடுக்கத்தில் இருந்து குழந்தைகள் முதல் பெரியோர் வரை பலரும் உயிர் தப்பியுள்ள நிலையில், அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலநடுக்கத்தில் சிக்கி இன்று வரை 19,300 பேர் பலியானதாக தகவல் வெளியாகிறது.
இதில், வீடுகளை இழந்து, உறவுகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நிலை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் துருக்கி மற்றும் சிரியாவுக்கு உதவிக் கரம் நீட்டியுள்ளன.