1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Ashwin angry reply to overhyping virat kohli playing ranji match

என்னடா ஓவரா பொங்குறீங்க… ரஞ்சி கோப்பையோட ஹிஸ்டரி தெரியுமா?... கொந்தளித்த அஸ்வின்!

கோலி
பல ஆண்டுகள் கழித்து இந்திய அணியின் நட்சத்திர வீரர்  விராட் கோலி ரஞ்சி கோப்பை தொடரில் டெல்லி அணிக்காக விளையாடினார். இதைக் காண எப்போதும் இல்லாத அளவுக்கு டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் 25000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் குழுமிமனார்கள். இதனால் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இந்நிலையில் சில சமூகவலைதளப் பக்கங்கள் கோலியால் ரஞ்சி போட்டி ஆசிர்வதிக்கப்பட்டுள்ளது என்றெல்லாம் கொஞ்சம் மிகைப்படுத்தி பதிவுகளைப் பகிர்வதைக் காண முடிந்தது. இது பற்றி அஸ்வின் தற்போது தன்னுடைய அதிருப்தியை பதிவு செய்துள்ளார்.

அதில் “ரஞ்சி கோப்பையின் வரலாறு இவர்களுக்கெல்லாம் தெரியுமா? அது எத்தனை ஆண்டுகளாக தொடர்ந்து நடக்கிறது என்றாவது தெரியுமா? இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் தொடர்ந்து ரஞ்சி கோப்பையில் விளையாடினார் என்பது தெரியுமா? வீரர்களுக்குதான் கிரிக்கெட் முக்கியமே தவிர. கிரிக்கெட்டுக்கு வீரர்கள் முக்கியம் இல்லை.” என ஆவேசமாக பதிலளித்துள்ளார். 
About Writer
vinoth