புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By siva
Last Updated : சனி, 18 டிசம்பர் 2021 (13:39 IST)

6 விக்கெட்டுக்களை இழந்து தத்தளிக்கும் இங்கிலாந்து: ஃபாலோ ஆன் ஆகுமா?

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது அடிலெய்ட் மைதானத்தில் நடந்து வருகிறது
 
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 473 ரன்கள் எடுத்த போது டிக்ளேர் செய்தது 
 
இந்த நிலையில் தற்போது இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. அந்த அணி சற்று முன் வரை 60 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது என்பதும் இன்னும் 304 ரன்கள் பின்தங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனால் இங்கிலாந்து அணி ஃபாலோ ஆன ஆக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.  பென் ஸ்டோக்ஸ் மற்றும் வோக்ஸ் ஆகியோர் தற்போது பேட்டிங் செய்து விளையாடி வருகின்றனர்