1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 18 டிசம்பர் 2021 (08:49 IST)

கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களுக்கு ஆப்பு வைத்த ஒமிக்ரான்!

தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவ தொடங்கிய ஒமிக்ரான் ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளன. 

 
தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவ தொடங்கிய வீரியமடைந்த கொரோனா திரிபான ஒமிக்ரான் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸால் ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளன. இதனால் உலக நாடுகள் பலவும் ஒமிக்ரான் பாதிப்பை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.
 
நேற்று பிரிட்டனில் ஒரே நாளில் 78,000-க்கும் அதிகமானோர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டிருப்பது உலகம் முழுவதுமே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து ஒமிக்ரான் பரவல் எதிரொலியாக ஐரோப்பிய நாடுகளில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.  விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் பின்வருமாறு... 
 
இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்வீடன், அயர்லாந்து, இத்தாலி உள்ளிட்ட நாடுகளுக்கு வெளிநாடுகளில் இருந்து சுற்றுலாப்பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. 
 
கனடாவில் கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி வெளிநாட்டு பயணங்களை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
ஸ்வீடன் நாட்டுக்கு தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே வர வேண்டும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 
 
இங்கிலாந்தில் இருந்து பிரான்ஸ் செல்ல ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் தடை விதித்துள்ளன.