செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 18 டிசம்பர் 2021 (11:02 IST)

சரிவில் இருந்து இங்கிலாந்தை மீட்கும் ரூட்& மலான் கூட்டணி!

ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி இப்போது அடிலெய்டில் நடந்து வருகிறது.

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான பாரம்பரியமான கிரிக்கெட் தொடரான ஆஷஸ் இப்போது ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் பிர்ஸ்பேனில் நடந்த முதல் போட்டியை ஆஸி அணி எளிதாக வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்று அடிலெய்டில் இரண்டாம் டெஸ்ட் போட்டி நடந்துவருகிறது.

இதில் முதலில் பேட் செய்ய முடிவு செய்த ஆஸி மார்னஸ் லபுஷானின் சதம் மற்றும் ஸ்மித், வார்னர் ஆகியோரின் அரைசதத்தாலும் 473 ரன்கள் சேர்த்து 9 விக்கெட்களை இழந்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து நேற்று களமிறங்கிய இங்கிலாந்து அணி 10 ஓவர்களுக்குள்ளாகவே 2 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

இந்நிலையில் இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தில் ரூட் மற்றும் டேவிட் மலான் அகிய இருவரும் நிதானமாக நங்கூரமிட்டு ஆடி அணியை சரிவில் இருந்து மீட்கப் போராடி வருகின்றனர்.