தொடர்புடைய செய்திகள்
- கோடீஸ்வரர்கள் அதிகம் வாழும் மாநிலங்கள் பட்டியல்.. தமிழகத்திற்கு எந்த இடம்?
- இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்கு செல்லும் ஜான்வி கபூரின் படம்!
- டி 20 போட்டிகளில் 100 விக்கெட் எடுத்த முதல் இந்திய வீரர்… அர்ஷ்தீப் சிங் சாதனை!
- இந்தியாவுக்கு எதிரானப் போட்டி… போராடித் தோற்ற ஓமன்!
- 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதல்: அழிவை ஒப்புக்கொண்ட லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது..!
மீண்டும் நடக்கும் இந்தியா பாகிஸ்தான் போட்டி… நடுவராக ஆண்டி பைகிராஃப்ட்!
ஆசியக் கோப்பை தொடரின் முதல் சுற்றுப் போட்டிகள் முடிந்து சூப்பர் நான்கு சுற்றுகள் தொடங்கவுள்ளன. இந்த தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டிகளில் ஒன்றான இந்தியா- பாகிஸ்தான் போட்டி சில தினங்களுக்கு முன்னர் பரபரப்பில்லாமல் ஒருதலைபட்சமாக முடிந்தது. ஆனால் போட்டியில் நடந்த இன்னொரு சம்பவம்தான் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. இந்த போட்டி முடிந்ததும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி வீரர்கள் கைகுலுக்கிக் கொள்ளவில்லை.
இந்த சர்ச்சைகள் இன்னும் ஓயாத நிலையில் மீண்டும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியின் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சூப்பர் நான்கு சுற்றுக்கு இரு அணிகளுமே தகுதி பெற்று விட்ட நிலையில் செப்டம்பர் 21 ஆம் தேதி இரு அணிகளும் மீண்டும் மோதவுள்ளன.
முன்னதாக நடந்த இந்தியா பாகிஸ்தான் போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் சல்மானிடம் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ்விடம் கைகுலுக்க வேண்டாம் என போட்டி நடுவர் ஆண்டி பைகிராஃப்ட் தெரிவித்ததாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவர் மேல் புகாரளித்து அவரைத் தொடரை விட்டு நீக்க முயற்சித்தது. ஆனால் அதை ஐசிசி நிராகரித்தது. இந்நிலையில் தற்போது இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கும் ஆண்டி பைகிராஃப்டே நடுவராக செயல்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த கட்டுரையில்