வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 17 பிப்ரவரி 2023 (16:43 IST)

100 டெஸ்ட் போட்டியில் விளையாடும் புஜாரா… இதுவரை இந்த மைல்கல்லை எட்டிய 13 வீரர்கள்!

இந்தியா மற்றும் ஆஸி அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது.

இந்த டெஸ்ட் போட்டியில் விளையாடும் 35 வயது புஜாராவுக்கு இது 100 ஆவது டெஸ்ட் ஆகும். சமீபகாலமாக சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாரா உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி மீண்டும் அணிக்குள் திரும்பி தனது இடத்தைப் பிடித்தார்.

இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகள் விளையாடிய 13 ஆவது வீரர் என்ற பெருமையை புஜாரா பெற்றுள்ளார். அந்த பட்டியலில் சச்சின், ட்ராவிட், கும்ப்ளே, கபில்தேவ், கவாஸ்கர், கங்குலி, லஷ்மன், திலீப் வெங்சர்கார், கங்குலி, கோலி, இஷாந்த் சர்மா, ஹர்பஜன் சிங், சேவாக் ஆகியோருக்குப் பிறகு புஜாராவும் இணைந்துள்ளார்.