1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 20 பிப்ரவரி 2023 (09:39 IST)

25000 ரன்கள் என்ற மைல்கல்… சச்சினின் சாதனையை முறியடித்த ரன்மெஷின் கோலி!

இந்திய அணியின் ரன்மெஷின் கோலி, சர்வதேசப் போட்டிகளில் 25000 ரன்கள் என்ற சாதனையை எட்டியுள்ளார்.

விராட் கோலி, கடந்த சில ஆண்டுகளாக மோசமான பார்மில் இருந்த நிலையில் தற்போது மீண்டும் தன்னுடைய ரன்மெஷின் ஃபார்முக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் நேற்று ஆஸி அணிக்கு எதிரான பேட்டிங்கின் போது அவர் சர்வதேசப் போட்டிகளில் 25000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார்.

இந்த சாதனையை நிகழ்த்தும் ஆறாவது வீரராக நுழைந்துள்ளார் கோலி. இதற்கு முன்னர் சச்சின், காலிஸ், சங்ககரா, ரிக்கி பாண்டிங் மற்றும் மகேலா ஜெயவர்த்தனா ஆகியோர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இவர்கள் அனைவரையும் விட குறைவான இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை கோலி நிகழ்த்தியுள்ளார். அவர் 549 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.