சனி, 14 செப்டம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: செவ்வாய், 16 ஜூலை 2024 (17:09 IST)

புகழ் வந்ததும் கோலி மாறினார்… ஆனால் ரோஹித்…? – முன்னாள் இந்திய வீரர் கருத்து!

ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை கிரிக்கெட்டின் முகமாக ஒரு வீரர் இருப்பார். அந்த வகையில் இப்போது உச்சப் புகழோடு உலகளவில் ரசிகர்களைப் பெற்று இருக்கிறார் கோலி. சமீபத்தில் டி 20 உலகக் கோப்பையை வென்ற அணியில் அவர் இடம்பெற்றிருந்தார். அவர் உலகக் கோப்பையோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர, அந்த புகைப்படம் ஆசியாவிலேயே அதிகம் பேரால் லைக் செய்யப்பட்ட புகைப்படம் என்ற சாதனையைப் படைத்தது.

இந்திய கிரிக்கெட்டின் கேப்டனாக இருந்து பல சாதனைகளைப் படைத்த கோலி, சில ஆண்டுகளுக்கு முன்னர் பிசிசிஐ உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பதவி விலகினார். அதன் பின்னர் அணியில் ஒரு வீரராக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் கோலி பற்றி பேசியுள்ள முன்னாள் இந்திய வீரர் அமித் மிஸ்ரா “கேப்டன் பதவி மற்றும் புகழ் வந்ததும் கோலியிடம் மாற்றம் வந்தது. அதனால்தான் அவருக்கு அணியில் பெரியளவில் நண்பர்கள் இல்லை. ஆனால் ரோஹித் ஷர்மா புகழ் வந்தபோதும் அதற்கு முன்பு எப்படி பழகினாரோ அப்படியே பழகினார்” என தெரிவித்துள்ளார்.