வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: திங்கள், 15 ஜூலை 2024 (16:54 IST)

எங்க ஊருக்கு வந்து fun பண்ணுங்க… இந்திய அணிக்கு அழைப்பு விடுத்த மாலத்தீவு!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி 20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்று சாதனை படைத்துள்ளது. உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி பரபரப்பான போட்டியின் முடிவில் இரண்டாவது முறையாக சாம்பியன் ஆனது.

இந்த வெற்றிக் கொண்டாட்டம் நாடு முழுவதும் நடந்து இப்போதுதான் அடுத்த தொடர்களுக்கு இந்திய அணி தயாராகி வருகிறது. இந்நிலையில் மாலத்தீவுகளின் சுற்றுலாத்துறை இந்திய அணியை தங்கள் தீவுகளுக்கு வந்து உலகக் கோப்பை வெற்றியைக் கொண்டாடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதை ஏற்று இந்திய அணி மாலத்தீவுகளுக்கு செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.