வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 10 ஜனவரி 2024 (21:03 IST)

பவன் கல்யாணை சந்தித்த அம்பதி ராயுடு...மீண்டும் அரசியலில் குதிக்கிறாரா?

bavan kalyan, ambhathy raidu
பிரபல கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு  ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாணை சந்தித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் பிரபலமான வீரர்களில் ஒருவர் அம்பத்தி ராயுடு. இவர், இந்திய அணிக்காக பல சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.

சர்வதேச ஓட்டியில் இருந்து ஓய்வை  அறிவித்த நிலையில், கடந்த ஐபிஎல் சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தார்.

அதன்பின்னர், கடந்த ஆண்டு ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிபெற்ற நிலையில் இந்த தொடருடன் ஐபிஎல்லில் இருந்து அம்பத்தி ராயுடு  ஓய்வை அறிவித்தார்.

இதையடுத்து, அவர் என்ன செய்ய போகிறார் என்ற ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்த போது,  கடந்த வாரம் அரசியலில் இணைவதாக அறிவித்த அம்பத்தி ராயுடு, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை நேரில் சந்தித்து,  ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

இது பரப்பாக  பேசப்பட்ட நிலையில், அக்கட்சியில் இணைந்து ஒரு வார காலம் கூட ஆகாத நிலையில் திடீரென தான் கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்தார்.

இந்த நிலையில், இன்று ஜனசேனா கட்சியின் தலைவரும், தெலுங்கு சினிமாவின் பவர் ஸ்டாருமான பவன் கல்யாணை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

அம்பதிராயுடு அக்கட்சியில் இணைய வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.