வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 10 ஜனவரி 2024 (07:48 IST)

ரோஹித் ஷர்மா பிராட்மேன் போன்றவர்… இங்கிலாந்து முன்னாள் வீரர் புகழாரம்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவில் ஜனவரி 25 ஆம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் இந்திய மைதானங்களில் இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா பிராட்மேனை போல விளையாடக் கூடியவர் என மாண்ட்டி பேனேசர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் “இந்திய சுழல்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானங்களில் ரோஹித் ஷர்மாவின் சாதனைகள் நம்ப முடியாத அளவுக்கு உள்ளன. இங்கிலாந்து அணி வெற்றி பெற வேண்டுமானால் அவரை சீக்கிரமாக ஆட்டமிழக்க வைக்க வேண்டும். அவரை அமைதியாக்கிவிட்டால் அது இளம் இந்திய வீரர்களுக்கு நெருக்கடியாக அமையும். ” எனக் கூறியுள்ளார்.

இந்திய மைதானங்களில் விளையாடிய 36 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 67+ ரன்கள் சராசரியோடு ரோஹித் ஷர்மா 2002 ரன்கள் சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.