வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 5 டிசம்பர் 2023 (21:47 IST)

சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது வருத்தம்- டேவிட் வார்னர்

warner
மிக்ஜாம் புயல் மற்றும் 47 ஆண்டுகளில் இல்லாத அதிகனமழையால் ஒட்டுமொத்த சென்னையும் ஸ்தம்பித்துள்ளது.

இந்த நிலையில், பாதிப்புகள் அதிகமாக உள்ள நிலையில், தமிழக அரசுக்கு உதவுவதாக நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா  உறுதியளித்திருந்தார்.

இந்த நிலையில், பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்வதில் முழு கவனத்துடன் செயல்பட்டு, வெள்ளம் சூழ்ந்த இடங்களில் இருந்த மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ‘’ தமிழகத்தின் தலை நகரான சென்னையில்  ஏற்பட்டுள்ள மழை வெள்ளம் பற்றி ஆஸ்., வீரர் வார்னர் கருத்து தெரிவித்துள்ளார். 

அவர் கூறியதாவது: ''சென்னையில் பல பகுதிகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது. தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் மேடான பகுதிக்கு வாருங்கள். அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு வாருங்கள். புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும்  உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.