1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. AB devilliers talked abouy Suryakumar yadav shot selections

நான் ஆடாத ஷாட்களை கூட சூர்யகுமார் ஆடுகிறார்… பாராட்டிய ஏ பி டிவில்லியர்ஸ்!

சூர்யகுமார் யாதவ்
சமீபகாலமாக கிரிக்கெட்டின் சென்சேஷனான வீரராக கலக்கி வருகிறார் சூர்யகுமார் யாதவ். அவரின் ஆட்டம் டி 20 போட்டிகளில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக உச்சத்தில் உள்ளது. அவரை ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் மிஸ்டர் 360 பேட்ஸ்மேன் அன அழைத்து வருகின்றனர்.  ஆனால் அவரால் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இன்னும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஏ பி டிவில்லியர்ஸ் சூர்யகுமார் யாதவ்வின் ஆட்டம் பற்றி பேசியுள்ளார். அதில் “நான் ஆடாத பல ஷாட்களை அவர் ஆடுகிறார். அவர் கிரிக்கெட்டில் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. எதிர்காலத்தில் அவரின் ஆட்டம் மேலும் சிறப்பாக அமையும் என எண்ணுகிறேன்.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தன்னை நிலைநிறுத்துவது அவருக்கு கடினமான ஒன்றாக இருக்கும் என நினைக்கிறேன். எனக்கும் அவருக்கும் ஒற்றுமை இருப்பதை நான் உணர்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
டிஎன்பிஎல் கிரிக்கெட்: திண்டுக்கல் அணிக்கு தொடர் வெற்றி.. சேலம் அணியை வீழ்த்தியது..!