இந்திய அணிக்கு புதிய ஸ்பான்சர் ஒப்பந்தம்… அறிவித்த பிசிசிஐ!
இந்திய அணி இன்னும் சில மாதங்களில் உலக் கோப்பை தொடரில் விளையாட உள்ளது. இந்நிலையில் இந்திய அணிக்கு புதிய ஜெர்ஸி மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதை அறிமுகப்படுத்தும் விதமாக வீரர்கள் புதிய ஜெர்ஸியை அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகின.
புதிய ஜெர்ஸியில் இந்திய அணி எந்த நிறுவனத்தின் ஜெர்ஸி ஸ்பான்சர் பெயரும் இடம்பெறவில்லை. புது ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை இந்திய அணியின் ஜெர்ஸியில் ஸ்பான்சர் பெயர் இடம்பெறாது என சொல்லப்பட்டது.
இந்நிலையில் இப்போது இந்திய அணிக்கு டிரீம் 11 புதிய ஸ்பான்சராக ஒப்பந்தமாகியுள்ளது. 3 ஆண்டுகளுக்கு இந்திய அணியோடு ட்ரீம் 11 ஒப்பந்தம் செய்யப்பட்டது.
முன்னதாக இந்திய அணிக்கு பைஜூஸ் நிறுவனம் ஸ்பான்சராக செயல்பட்டது. அந்த நிறுவனத்தின் ஒப்பந்த காலம் முடியும் முன்னரே விலகிக் கொண்டுள்ளதாக சொல்லப்பட்டது. மேலும் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு பைஜூஸ் நிறுவனம் செலுத்த வேண்டிய தொகையும் பாக்கி உள்ளதாக சொல்லப்படுகிறது.