வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 30 ஜூன் 2023 (15:10 IST)

டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலி ஃபார்மை இழந்துவிட்டார்… இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கருத்து!

டெஸ்ட் போட்டிகளில் கடந்த சில ஆண்டுகளாக கோலி, தனது ஃபார்மை இழந்து போராடி வருகிறார். கடைசியாக ஆஸி அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் போட்டியில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சதமடித்தார். ஆனாலும் இன்னமும் தன்னுடைய பழைய ஃபார்மை அவர் மீட்டெடுக்கவில்லை.

மூன்றாண்டுகளுக்கு முன்னர் அவரின் டெஸ்ட் பேட்டிங் சராசரி கிட்டத்தட்ட 54 ஆக இருந்தது. ஆனால் இப்போது அது 48 ஆக உள்ளது. ஆனால் அவரின் சக போட்டியாளர்களான ஜோ ரூட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகிய இருவரும் டெஸ்ட் போட்டிகளில் சதங்களாக கலக்கி வருகிறார்.

இந்நிலையில் நேற்று ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் போது வர்ணனை செய்த இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் “கோலி டெஸ்ட் போட்டிகளில் தனது ஃபார்மை இழந்துவிட்டார்.  அவரால் ஃபார்மை மீட்கமுடியவில்லை. ஜோ ரூட் மற்றும் ஸ்மித் கடந்த காலங்களில் சேர்த்த ரன்களில் பாதியைக் கூட அவரால் சேர்க்க முடியவில்லை. அதனால் இனிமேல் fab 4 என்ற பேச்சுக்கே இடமில்லை” எனக் கூறியுள்ளார்.