ஆகஸ்ட் மாதம் சேப்பாக்கம் மைதானத்தை பிசிசிஐ வசம் ஒப்படைத்துவிடுவோம்: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்..!
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக சென்னை சேப்பாக்கம் மைதானத்தை தயார் செய்து பிசிசிஐ இடம் வரும் ஆகஸ்ட் மாதம் ஒப்படைத்து விடுவோம் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் மாதம் தொடங்க இருக்கும் நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தற்போது பராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் இந்த பணி 20 நாட்களில் முடிவடையும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் முழுமையாக மைதானத்தை தயார் செய்து பிசிசிஐ வசம் ஒப்படைத்து விடுவோம் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி தெரிவித்துள்ளார்.
ஆசிய மைதானங்கள் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்றும் ஆனால் இம்முறை சேப்பாக்கம் மைதானம் வேகப்பந்து வீச்சிற்கு சாதகமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். உலக கோப்பை தொடர் டிக்கெட் விற்பனை ஐசிஐசி மற்றும் பிசிசிஐ ஆகியவற்றின் அறிவுரைப்படி நடக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்
Edited by Mahendran