தொடர்புடைய செய்திகள்
- ரோஹித் மாதிரி ஒரு கேப்டனைப் பார்க்க முடியாது- மும்பை இந்தியன்ஸ் இளம் வீரர் கருத்து!
- தொண்டு நிறுவனத்திற்குச் சொந்தமான மருத்துவமனையுடன் ரேலா மருத்துவமனை புரிந்துணர்வு ஒப்பந்தம்
- டிராவிட் அறிவுரையை ஏற்காத இஷான் கிஷான்… ஐபிஎல் தொடருக்கு பயிற்சி!
- பேஸ்புக் லைவ் விவாதத்தில் எம்.எல்.ஏ மகன் சுட்டுக் கொலை! – மும்பையில் அதிர்ச்சி சம்பவம்!
- உச்சகட்டத்துக்கு செல்லும் மும்பை இந்தியன்ஸ் பிரச்சனை.. ஹர்திக் பாண்ட்யா செய்த செயல்!
செல்போன் அழைப்பைக் கூட எடுப்பதில்லையாம்.. இஷான் கிஷானை விமர்சித்த முன்னாள் இந்திய வீரர்!
தென்னாப்பிரிக்கா தொடரில் இடம்பெற்றிருந்த இஷான் கிஷான் மனச்சோர்வு என்று சொல்லி அந்த தொடரில் இருந்து விடுப்பு கேட்டு வெளியேறினார். அதன் பின்னர் தற்போது நடந்து வரும் ரஞ்சி கோப்பை தொடரிலும் விளையாடவில்லை.
இஷான் கிஷான் மீண்டும் அணியில் இணைவது சம்மந்தமாக பேசிய பயிற்சியாளர் டிராவிட், “இஷான் மீண்டும் அணிக்கு திரும்ப வேண்டுமென்றால், அவர் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும். அப்போதுதான் அவர் பரிசீலனைக்கு உட்படுத்தப்படுவார்” எனக் கூறியிருந்தார். இதன் மூலம் இப்போதைக்கு இஷான் கிஷான் மேல் தேர்வுக்குழுவினரின் பார்வை இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா இஷான் கிஷான் விவகாரம் குறித்து பேசியுள்ளார். அதில் “இந்திய அணிக்கு தேர்வு செய்யப் படுவதற்கு முன்பு அவர் சில போட்டிகளிலாவது வென்றிருக்க வேண்டும். ஜூன் அல்லது ஜுலை மாதத்தில் ஓய்வென்றால் கூட பரவாயில்லை, ஆனால் இப்போது ரஞ்சி தொடர் நடக்கும் போது அவர் ஓய்வெடுப்பது சரியாக இருக்காது. அப்போதுதான் அவர் தான் இந்திய அணிக்கு தயாராக இருக்கிறேன் என உணர்த்த முடியும். அவர் செல்போன் அழைப்பைக் கூட எடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது” எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்