1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 10 பிப்ரவரி 2024 (08:31 IST)

ரோஹித் மாதிரி ஒரு கேப்டனைப் பார்க்க முடியாது- மும்பை இந்தியன்ஸ் இளம் வீரர் கருத்து!

மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா அறிவிக்கப்பட்டார். இது ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஹர்திக்கை குஜராத்தில் இருந்து ட்ரேட் செய்யும்போதே அவர் தனக்குக் கேப்டன் பதவி வேண்டுமெனக் கேட்டதாகவும், அதற்கு ஒப்புக்கொண்டே மும்பை இந்தியனஸ் அவரை வாங்கியதாகவும் சொல்லப்பட்டது.

இந்த அறிவிப்பு வெளியான உடனே மும்பை இந்தியன்ஸ் அணியின் சமூக வலைதளப் பக்கங்களை ரசிகர்கள் அன்பாலோ செய்ய ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த முடிவு அந்த அணிக்குள்ளேயே சலசலப்பை உருவாக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த அணியின் முக்கிய வீரர்களான சூர்யகுமார் யாதவ் மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர் ஹர்திக் கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து அதிருப்தி அடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ரோஹித் ஷர்மாவும் இதுவரை ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஒரு வாழ்த்துக் கூட சொல்லவில்லை.

இந்நிலையில் இளம் வீரரான திலக் வர்மாவும் மும்பை இந்தியன்ஸ் முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். அதில் “ரோஹித் ஷர்மாவை போன்ற வெற்றிகரமான கேப்டனை நாம் பார்க்க முடியாது. அவர் எங்கள் அனைவரையும் சிறப்பாக பார்த்துக் கொள்வார். அவர் கீழ் விளையாடியதற்கு நான் மிகவும் பெருமையாக உணர்கிறேன். அந்த அணியில் நான் சிறப்பாக விளையாடியதால்தான் எனக்கு இந்திய அணியில் இடம் கிடைத்தது.” எனக் கூறியுள்ளார். இப்படி ஒட்டுமொத்த அணியும் ரோஹித் ஷர்மாவுக்கு ஆதரவாக இருக்கும் நிலையில் ஹர்திக் பாண்ட்யா எப்படி அணியை வழிநடத்தப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.