திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 9 பிப்ரவரி 2024 (19:25 IST)

தொண்டு நிறுவனத்திற்குச் சொந்தமான மருத்துவமனையுடன் ரேலா மருத்துவமனை புரிந்துணர்வு ஒப்பந்தம்

Rela Hospital
தொண்டு நிறுவனத்திற்குச் சொந்தமான மருத்துவமனையுடன் ரேலா மருத்துவமனை புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் கல்லீரல் மாற்று சிகிச்சை திட்டத்தை அமைக்கிறது.
சென்னை, இந்தியா – 09, பிப்ரவரி 2024: கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் உலகளாவிய அங்கீகாரம் பெற்ற ரேலா மருத்துவமனையானது, ஷேக் ஃபாசிலதுன்னெசா முஜிப் நினைவு KPJ (SFMMKPJ) மருத்துவமனையுடன், பங்களாதேஷில் ஒரு விரிவான கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை திட்டத்தை நிறுவ வேண்டும் என்பதன் பொருட்டு, ஒரு செயல்திட்ட அடிப்படையிலான ஒத்துழைப்புக்குள் இணைந்துள்ளது.
இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்தியாவுக்கான வங்கதேச உயர் ஆணையர் திரு.முஸ்தாபிசுர் ரஹ்மான், தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை செயலர் திரு.ககன்தீப் சிங் பேடி, ரேலா மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பேராசிரியர் முகமது ரேலா மற்றும் SFMMKPJ மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி திரு.முகமது. தௌபிக் பின் இஸ்மாயில் ஆகியோர் முன்னிலையில் இன்று கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்ற ரேலா மருத்துவமனையானது, ஒரு அதிநவீன கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை திட்டத்தை அமைப்பதற்கும் இயக்குவதற்கும் எதுவாக, SFMMKPJ மருத்துவமனைக்கு விரிவான பயிற்சி மற்றும் ஆதரவை வழங்கும்.
*திரு. முஸ்தாபிசுர் ரஹ்மான்* தனது உரையில், “வங்கதேசத்தில் மேம்பட்ட கல்லீரல் மாற்று சிகிச்சை சேவைகளை அறிமுகப்படுத்த உள்ள இந்த தனித்துவமான கூட்டாண்மை குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இத்தகைய முன்னோடி முயற்சிகள் ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சியின் உணர்வை எடுத்துக்காட்டுகின்றன, பிராந்தியம் முழுவதும் உள்ள சமூகங்களுக்குள் நம்பிக்கை மற்றும் குணப்படுத்துதல் ஆகியவற்றை வளர்த்தெடுக்கின்றன. இந்த இரு அமைப்புகளாலும் பகிர்ந்து கொள்ளப்படும் துறைசார் நிபுணத்துவமானது, இந்த மிக முக்கிய சிகிச்சை முறையின் அணுகும் தன்மையினை அதிகரிக்கும் மற்றும் வங்கதேசம் மற்றும் அதைத் தாண்டியுள்ள பகுதிகளில் கல்லீரல் தொடர்பான பாதிப்புகளால் அவதிப்படுவோருக்கு கிடைக்கும் சிகிச்சையின் தரத்தை மேம்படுத்தும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.” என்று தெரிவித்தார்.
*திரு. ககன்தீப் சிங் பேடி* பேசுகையில், “கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை என்பது கல்லீரல் நோய் பாதிப்பின் இறுதி நிலையில் உள்ள நோயாளிகளுக்கு உயிர் காக்கும் தீர்வை வழங்கும் ஒரு சிக்கலான அறுவை சிகிச்சை முறையாகும். ரேலா மருத்துவமனை மற்றும் SFMMKPJ மருத்துவமனைக்கு இடையேயான இந்த ஒத்துழைப்பு என்பது, சுகாதார விநியோகத்தை மேம்படுத்துவதிலும், முக்கியமான சுகாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்வதிலும் சர்வதேச கூட்டாண்மைகளின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. குறிப்பாக, சுகாதார வெளிப்பாடுகளை மேம்படுத்துதல் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை சேவைகளுக்கு அதிகரித்து வரும் தேவையினை நிவர்த்தி செய்வது ஆகியவற்றில் சென்னையை அடிப்படையாகக் கொண்ட மருத்துவமனை பெரும் முன்னேற்றம் அடைந்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்தார்.
இந்த ஒத்துழைப்பு குறித்த தனது உற்சாகத்தை வெளிப்படுத்திய பேராசிரியர் முகமது ரேலா கூறுகையில், "வங்கதேசத்திற்கு மேம்பட்ட கல்லீரல் மாற்று சிகிச்சை சேவைகளை கொண்டு வர SFMMKPJ மருத்துவமனையுடன் கூட்டு சேர்ந்திருப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். வங்கதேசத்தில் உள்ள நோயாளிகளின் வாழ்வில் நேர்மறையான பாதிப்பை உண்டாக்கும்படி, நீடித்திருக்கும் வகையிலான கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை திட்டத்தினை உருவாக்குவதற்கு ஆதரவு அளித்து, எங்கள் நிபுணத்துவம் மற்றும் வளங்களைப் பகிர்ந்து கொள்ள எங்கள் குழு உறுதிபூண்டுள்ளது” என்று கூறினார்.
*திரு. முகமது. தௌஃபிக் பின் இஸ்மாயில்* இந்த ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்தார்: "SFMMKPJ மருத்துவமனையில் கல்லீரல் மாற்று சிகிச்சை சேவைகளை அறிமுகப்படுத்துவதற்கு, ரேலா மருத்துவமனையுடன் இந்த பயணத்தை மேற்கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மேம்பட்ட சுகாதார சேவைகளுக்கான அணுகலை விரிவுபடுத்துதல் மற்றும் நோயாளியின் முடிவுகளை மேம்படுத்துதலுக்கான எங்கள் நோக்கத்தில் இந்த ஒத்துழைப்பு ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பிரதிபலிக்கிறது."
வங்கதேசத்தின் மாண்புமிகு பிரதமர் திருமதி ஷேக் ஹசீனா தலைமையிலான ஷேக் ஃபாசிலதுன்னெசா முஜிப் நினைவு அறக்கட்டளையின் ஒரு பகுதியான SFMMKPJ மருத்துவமனை, வங்கதேச மக்களுக்கு உயர்தர சுகாதார சேவைகளை வழங்குவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையை புகழ்பெற்ற மலேசிய தனியார் சுகாதார சேவை நிறுவனமான KPJ ஹெல்த்கேர் பெர்ஹாட் நிர்வகிக்கிறது. ரேலா மருத்துவமனையின் நிபுணத்துவம் மற்றும் அனுபவத்தைப் பயன்படுத்திக்கொள்வதன் மூலம், SFMMKPJ மருத்துவமனையானது கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான சிறந்த பிராந்திய மையமாக மாறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இது தேவைப்படும் நோயாளிகளுக்கு நம்பிக்கையையும் குணப்படுத்துதலையும் வழங்குகிறது.