தல தோனிக்கும், ஹர்திக் பாண்டியாவுக்கும் ஓட்டபந்தயம்: ஜெயித்தது யார் தெரியுமா? (வீடியோ இணைப்பு)

Last Modified புதன், 13 டிசம்பர் 2017 (14:01 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு வயதாகி விட்டது, அவர் பிட்டாக, உடல் தகுதியுடன் இல்லை என பல நேரங்களில் விமர்சனங்கள் வருகின்றன. இந்நிலையில் அதற்கு பதிலளிக்கும் விதமாக வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
 
தல எனவும், கேப்டன் கூல் எனவும் ரசிகர்களால் பாராட்டப்படுபவர் தோனி. இவரது ரசிகர் பட்டாளம் அதிகம். அதே நேரத்தில் அவர் மந்தமாக விளையாடும் போது அவரது ஓய்வு குறித்தும், அவரது உடல் தகுதி குறித்தும் விமர்சனங்கள் வருகின்றன.

 
தோனியை பார்த்து கேள்வி எழுப்புபவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக தோனி, ஹர்திக் பாண்டியாவுக்கும் இடையே 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் அமைந்துள்ளது. இந்த ஓட்டப்பந்தயத்தில் இருவரும் தங்கள் முழு திறமையை வெளிப்படுத்தி ஓடினர்.
 
24 வயதான ஹர்திக் பாண்டியாவுக்கும் 36 வயதான தோனிக்கும் இடையே நடந்த இந்த 100 மீட்டர் ஓட்டப்பந்தையத்தில் யார் வெற்றி பெற்றிருப்பார் என்ற எதிர்பார்ப்பு எல்லாருக்கும் இருக்கும். அதில் தல தோனி தனது முழு திறமையை வெளிப்படுத்தி வெற்றிபெற்றுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :