1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 12 டிசம்பர் 2017 (12:43 IST)

டெல்லியிலிருந்து மும்பைக்குக் குடிபெயரும் விராட் கோலி!

அனுஷ்கா ஷர்மாவிற்காக மும்பையில் குடியேற விராத் கோலி முடிவு செய்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா ஆகியோருக்கு இத்தாலி நாட்டில் நேற்று திருமணம் நடைபெற்றது.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா ஆகியோர் வெகு நாட்களாக காதலித்து வந்தனர். இருவருக்கும் இடையே திருமணம் நடைபெற உள்ளது அவ்வப்போது செய்திகள் வெளியாவது வழக்கம். இதை இருவருமே மறுத்து வந்தனர். இந்நிலையில் விராட் கோலி நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் அனுஷ்கா சர்மா உடனான திருமண புகைப்படத்தை வெளியிட்டார். உறவினர்களுக்காக டெல்லியில் வரும் 21-ம் தேதியும், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் சினிமாத்துறை நண்பர்களுக்காக மும்பையில் வரும் 26-ம் தேதியும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
திருமணத்துக்குப் பின்பும் அனுஷ்கா ஷர்மா பாலிவுட்டில் தொடர்ந்து நடிக்கப்போவதால் திரைப்படங்களில் நடிக்க வசதியாக அனுஷ்கா ஷர்மா மும்பையில் தங்கியிருக்க வேண்டும். எனவே விராட் கோலி டெல்லியிலிருந்து மும்பைக்கு குடியேற இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.