வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 13 டிசம்பர் 2017 (07:34 IST)

18 சிக்சர்கள் அடித்து சாதனை படைத்த கிறிஸ் கெயில்

வங்கதேசத்தில் நேற்று நடைபெற்ற பி.பி.எல்(Bangladesh Premier League) இறுதி போட்டியில் கிறிஸ் கெயிலின் அசத்தலான ஆட்டத்தால் ரங்க்பூர் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
வங்கதேச பிரீமியர் லீக்கின்(BPL) இறுதி போட்டி டாக்கா டைனமைட்ஸ் மற்றும் ரங்பூர் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற டாக்கா டைமண்ட்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜான்சனும் க்ரிஸ் கெயிலும் களமிறங்கினர். இரண்டாவது ஓவரிலே ஜான்சன் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்தபடியாக மெக்கல்லம் களமிறங்கினார்.
 
கிறிஸ் கெயிலின் அதிரடி ஆட்டத்தால் அணியின் ரன் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. இறுதியில், அந்த அணி 20 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்தது. கெயில் 69 பந்துகளில் 18 சிக்சர்கள், 5 பவுண்டரிகள் அடித்து 146 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மெக்கல்லம் 43 பந்துகளில் 3 சிக்சர்கள், 4 பவுண்டரிகள் அடித்து 51 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
 
இதனையடுத்து களமிறங்கிய டாக்கா டைனமைட்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. இதனால் ரங்பூர் ரைடர்ஸ் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
 
இதன்மூலம் டி-20 யில் 11,000 ரன்கள், 20 சதங்கள், 819 சிக்சர்கள் குவித்த முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையை கெயில் பெற்றுள்ளார். சாதனைகள் படைத்து வரும் கிறிஸ் கெயிலை பலரும் பாராட்டி வருகின்றனர்.