வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 2 டிசம்பர் 2021 (22:19 IST)

2 வது டெஸ்ட் போட்டி: புஜாராவுக்கு பதிலாக கோலி!

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

ஏற்கனவே டி-20 தொடரை இந்திய அணி வென்றுள்ள நிலையில், தற்போது டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது.

சமீபத்தில் நியூசிலாந்து – இந்திய அணிகளுக்கு இடையேயான  முதல் டெஸ்ட் போட்டியில் டிரா ஆனது.

இந்நிலையில் நாளை மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கும் 2 வது டெஸ்ட் போட்டியில் புஜாராவுக்குப் பதிலாக கோலி களமிறங்கலாம் என தகவல் வெளியாகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் கோலி ஓய்வெடுத்த நிலையில் ரஹானே கேப்டனாக செயல்பட்டார்.