1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Today corona cases in India

ஒரே நாளில் 9 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு! – இந்திய நிலவரம்!

India
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் மெல்ல குறைந்து வரும் நிலையில் இன்று சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1 லட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 40 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 20 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 9,765 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 3,46,06,541 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 477 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  4,69,724 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,40,37,054 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 99,763 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
சென்னையில் இன்றைய தங்கம்-வெள்ளி விலை நிலவரம்!