1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 28 ஜனவரி 2023 (18:45 IST)

1st ODI : இங்கிலாந்தை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணி வெற்றி

england- south Africa
இங்கிலாந்து கிரிக்கெட் அணி தற்போது தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

நேற்று நடந்த முதல் ஒரு நாள் போட்டியில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது.

இதில், 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்கள் எடுத்து, இங்கிலாந்து அணிக்கு 299 ரன் கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இதையடுத்து பேட்டிங் செய்த, இங்கிலாந்து அணி 271 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளும் இழந்து  தோற்றது.

எனவே, தென்னாப்பிரிக்க அணி 27 ரன்கள் வெற்றி பெற்றது.  அன்ரிச் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.