1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 23 ஜனவரி 2023 (09:35 IST)

அந்தமான் தீவுகளுக்கு ராணுவ வீரர்களின் பெயர்! – பிரதமர் மோடி அறிவிப்பு!

Pm Modi
இன்று நேதாஜியின் பிறந்தநாள் பாராக்கிரம தினமாக (Parakram Diwas) கொண்டாடப்படும் நிலையில் அந்தமான் தீவுகளுக்கு ராணுவ வீரர்கள் பெயர் சூட்டப்பட உள்ளது.

இந்திய சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளான இன்று (ஜனவரி 23) பாராக்கிரம தினமாக கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இன்று பராக்கிரம தினத்தை சிறப்பிக்கும் விதமாக இந்திய நாட்டிற்காக போராடி இன்னுயிர் ஈந்த பரம்வீர் சக்ரா விருதை பெற்ற ராணுவ வீரர்களின் பெயரை அந்தமானை சுற்றியுள்ள பெயரிடப்படாத 21 தீவுகளுக்கு சூட்ட உள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

மேஜர் சோம்நாத் ஷர்மா, நாயக் ஜதுநாத் சிங், பிரு சிங், ஆல்பெர்ட் எக்கா, கேப்டன் விக்ரம் பத்ரா, மனோஜ் குமார் பாண்டே உள்ளிட்ட பல வீரர்களின் பெயர்கள் 21 தீவுகளுக்கு இன்று பிரதமர் மோடியால் சூட்டப்படுகின்றன.

Edit by Prasanth.K