செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 27 ஜனவரி 2023 (23:28 IST)

T-20 போட்டி: நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

newzeland wickets
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்று வரும் நிலையில் இன்றைய போட்டியில்  வெற்றி பெற்றுள்ளது.

இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது.

இதில், மிட்செல் 59 ரன்களும், கான்வெ 52 ரன்கள் அடித்தனர். இந்திய தரப்பில் வாஷிங்டன் சுந்தர் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த நிலையில் 177 என்ற இலக்கை நோக்கி விளையாடும் இந்திய அணி விளையாடியது.

இதில்,  வாசிங்டன் சுந்தர் 50 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 47 ரன்களும், ஹர்த்திக் பாண்டியா 21 ரன் களும் அடித்தனர்.

எனவே இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்துத் தோற்றது.

நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து தரப்பில், சன்டர், பிராஸ்செல், லாக்கீ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.